Advertise with Googlier.com AKKINIKKUNCHU https://akkinikkunchu.com/ 24/7 Speed News Thu, 24 Sep 2026 12:16:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://akkinikkunchu.com/wp-content/uploads/2025/01/cropped-fav-32x32.png AKKINIKKUNCHU https://akkinikkunchu.com/ 32 32 “ஒற்றுமை உணர்வை உளத்தில் இருத்துவோம்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. https://akkinikkunchu.com/389563/ https://akkinikkunchu.com/389563/#comments Thu, 24 Sep 2026 12:16:08 +0000 https://akkinikkunchu.com/?p=389563 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா           மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்                    மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா    இனத்தாற் சண்டை மொழியால் சண்டை மதத்தால் சண்டை  எங்கும் நடக்குது தேவையா என்பதை நினைத்துப் பார்த்தால் தெளிவும் பிறக்கும் வழியும் தெரியும்   யாதும் ஊரே யாவரும் கேளிர் மூத்தோர் மொழிந்தார் முழங்கிறோம் எங்கும் உலகம் தழுவிய ஒற்றுமைத் …

The post “ஒற்றுமை உணர்வை உளத்தில் இருத்துவோம்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. appeared first on AKKINIKKUNCHU.

]]>
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
          மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
                  மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா 
 
இனத்தாற் சண்டை மொழியால் சண்டை
மதத்தால் சண்டை  எங்கும் நடக்குது
தேவையா என்பதை நினைத்துப் பார்த்தால்
தெளிவும் பிறக்கும் வழியும் தெரியும்
 
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மூத்தோர் மொழிந்தார் முழங்கிறோம் எங்கும்
உலகம் தழுவிய ஒற்றுமைத் தத்துவம்
உணர்வில் கலந்தால் உலகம் ஒளிரும்
 
ஓடும் உதிரம் ஒழுகும் கண்ணீர்
ஒன்றாய் இருப்பதை உணருதல் வேண்டும்
இறைச்சி தோலெலும்பில் வேற்றுமை உண்டா
இதயம் இருத்தினால் இல்லையே சண்டை
 
பசியும் தாகமும் பிணியும் இறப்பும்
உறக்கமும் விழிப்பும் யாவர்க்கும் ஒன்றே
மனித மனத்தின் வக்கிர நிலையால்
இனமாய் மதமாய் பிரிந்தே கிடக்கிறோம் 
 
பிறப்பு என்பதே பெருவர மாகும்
வரத்தைச் சாபமாய் ஆக்குதல் முறையா
வேற்றுமை என்பதை விரட்டியே ஒழிப்போம்
ஒற்றுமை உணர்வை உளத்தில் இருத்துவோம் !
 

 

Loading

The post “ஒற்றுமை உணர்வை உளத்தில் இருத்துவோம்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. appeared first on AKKINIKKUNCHU.

]]>
https://akkinikkunchu.com/389563/feed/ 1
அனோஜனின் விடுதலைக்காக இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழரசுக் கட்சி! https://akkinikkunchu.com/389536/ https://akkinikkunchu.com/389536/#respond Thu, 24 Sep 2026 07:04:07 +0000 https://akkinikkunchu.com/?p=389536 சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இன்று (23) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற …

The post அனோஜனின் விடுதலைக்காக இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழரசுக் கட்சி! appeared first on AKKINIKKUNCHU.

]]>
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இன்று (23) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.

இதன்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலை தொடர்பாகவும், அவரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசரத் தேவையை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Loading

The post அனோஜனின் விடுதலைக்காக இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழரசுக் கட்சி! appeared first on AKKINIKKUNCHU.

]]>
https://akkinikkunchu.com/389536/feed/ 0
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரி உட்பட பலர் இன்னமும் தலைமறைவு; அனைவரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்ட பின்னரே பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் https://akkinikkunchu.com/389534/ https://akkinikkunchu.com/389534/#respond Thu, 24 Sep 2026 05:54:54 +0000 https://akkinikkunchu.com/?p=389534 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி கிடைக்கவில்லை. தாக்குதலின் பிரதான சூத்திரதாரி, தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே தகவல் தெரிந்தும் அதனை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மற்றும் சஹரான் குழுவினருக்கு உதவியவர்கள் பல்வேறு தரப்பினர் தொடர்பில் விசாரணைகள் நடக்கின்றன அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்பட்ட பின்னரே பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் என்று கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் கத்தோலிக்க சபையினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அருட்தந்தை சிறில் காமினியே இவ்வாறு தெரிவித்துள்ளார். …

The post உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரி உட்பட பலர் இன்னமும் தலைமறைவு; அனைவரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்ட பின்னரே பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் appeared first on AKKINIKKUNCHU.

]]>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி கிடைக்கவில்லை. தாக்குதலின் பிரதான சூத்திரதாரி, தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே தகவல் தெரிந்தும் அதனை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மற்றும் சஹரான் குழுவினருக்கு உதவியவர்கள் பல்வேறு தரப்பினர் தொடர்பில் விசாரணைகள் நடக்கின்றன அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்பட்ட பின்னரே பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் என்று கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் கத்தோலிக்க சபையினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அருட்தந்தை சிறில் காமினியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்துவதற்கு சஹ்ரான் தலைமையிலான குழுவுடன் தொடர்புகளை பேணிய 15 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் கிடைத்த நீதியாக மட்டுமன்றி நாட்டின் பாதுகாப்புக்காகவும் கிடைத்த தீர்ப்பாகவே பார்க்கின்றோம்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்குகளில் ஒன்றே இது. இன்னும் சில வழக்குகள் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட தரப்பினரால் தொடரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்துடன் இன்னும் விசாரணைகள் நடக்கும் விடயங்களும் உள்ளன. அதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்துவதற்கு சஹ்ரானுக்கு உதவிகளை வழங்கியமை மட்டுமன்றி இதனை திட்டமிடுதல், சூழ்ச்சிகளை செய்தவர்கள் யார் என்ற விசாரணைகள் நடக்கின்றன. இதன் பிரதான சூத்திரதாரிகள் மற்றும் இதன் பின்னால் இருந்தவர்கள் யார் என்பதனை கண்டறிய வேண்டும்.

தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள வழக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான வழக்கு என்று சிலர் குறிப்பிடுகின்றனர். ஊடகங்கள் அவ்வாறு கூறினாலும் இது ஒரு வழக்கு மட்டுமே. இன்னும் சில வழக்குகள் இடம்பெறுகின்றன. விசாரணைகள் நடக்கும் விடயங்களும் உண்டும். பி அறிக்கை மூலம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கையளிக்கும் வழக்கும் உண்டு. அதில் கைது செய்யப்பட்டுள்ள சிலர் இருக்கின்றனர். அதில் ஒருவரே சுரேஷ் சலே. அது சனல் 4 ஊடகத்தில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறும் வழக்காகும். அது இன்னும் விசாரணை மட்டத்திலேயே உள்ளது. அந்த விசாரணைகளை சரியாக செய்து, யார் இந்தச் சூழ்ச்சிகளை செய்தனர் என்ற விடயங்களை வெளிக்கொணர்ந்து அவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டு வர வேண்டும்.

அத்துடன் தாக்குதல் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிந்திருந்த போதும், அது தொடர்பில் செயற்படாத அதிகாரிகளும் இருக்கின்றனர். அவர்களில் ஏற்கனவே இருவருக்கு எதிராக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று இன்னும் பொறுப்புகளை செய்யாதவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் மூலம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று இந்த தாக்குதலின் பின்னால் இருந்து செயற்பட்டவர்கள் யார் என்பதனை வெளிக்கொணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Loading

The post உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரி உட்பட பலர் இன்னமும் தலைமறைவு; அனைவரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்ட பின்னரே பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் appeared first on AKKINIKKUNCHU.

]]>
https://akkinikkunchu.com/389534/feed/ 0
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து: புதிய சட்டமூலத்தை வெளியிட்டது அரசு;  அதிவிசேட வர்த்தமானி வெளியானது https://akkinikkunchu.com/389528/ https://akkinikkunchu.com/389528/#respond Thu, 24 Sep 2026 04:45:03 +0000 https://akkinikkunchu.com/?p=389528 இலங்கையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தயாரிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ அரசாங்கத்தால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் ஆலோசனையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டமூலம், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நாளில் நடைமுறைக்கு வரவுள்ளது. இலங்கைப் பிரஜைகள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அமைந்துள்ள அரச இராஜதந்திர சொத்துகள் மற்றும் …

The post பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து: புதிய சட்டமூலத்தை வெளியிட்டது அரசு;  அதிவிசேட வர்த்தமானி வெளியானது appeared first on AKKINIKKUNCHU.

]]>
இலங்கையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தயாரிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ அரசாங்கத்தால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் ஆலோசனையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டமூலம், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நாளில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இலங்கைப் பிரஜைகள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அமைந்துள்ள அரச இராஜதந்திர சொத்துகள் மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பது இந்தச் சட்டமூலத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளுக்கு அமைவாக, பயங்கரவாதக் குற்றங்கள், விசாரணைகள், தடுப்புக்காவல் மற்றும் வழக்குத் தொடர்வதற்கான புதிய சட்டக் கட்டமைப்பை இந்தச் சட்டமூலம் வழங்குகிறது.

அரசியல் அல்லது ஏதேனும் கருத்தியல் நோக்கத்திற்காக பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் அல்லது அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் கொலைகள், கடுமையான காயங்களை ஏற்படுத்துதல், பணயக்கைதிகளாக தடுத்து வைத்தல், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவித்தல், இணையத் தாக்குதல்கள் ஆகியவை பயங்கரவாதக் குற்றங்களாக இதில் வரையறுக்கப்பட்டுள்ளன.

எனினும், அமைதியான முறையில் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையைப் பாதுகாப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.அதன்படி, அமைதியான போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், ஊடகவியலாளர்களின் நியாயமான செய்தி அறிக்கைகள், அரசியல் விமர்சனங்கள், கருத்து வெளிப்பாடுகள் மற்றும் கல்வி அல்லது ஆராய்ச்சி நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பயங்கரவாதக் குற்றங்களாகவோ பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவோ கருதப்படாது என சட்டமூலத்தின் 4(4) பிரிவு உறுதிப்படுத்துகிறது.

சந்தேகநபர்களைக் கைது செய்யும் போதும் விசாரணைகளை முன்னெடுக்கும் போதும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்டமை தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் நெருங்கிய உறவினருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும். விசாரணைகள் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தின் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

நீதவான்களுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முன் அறிவிப்பின்றி தடுப்பு நிலையங்களைப் பார்வையிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.தடுப்புக்காவல் காலத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள்தடுப்புக்காவல் காலம் தொடர்பாகவும் கடுமையான வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிறப்பிக்கும் தடுப்பு உத்தரவு ஒரு தடவையில் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது. ஒட்டுமொத்த தடுப்புக்காவல் காலம் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு மேல் ஒருவரைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கு மேல் நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும். மேலும், தடுப்பு உத்தரவுகளின் சட்டபூர்வத் தன்மையைப் பரிசோதிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ‘சுயாதீன மறுஆய்வுக் குழு’ ஒன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தடுப்புக்காவல் கைதிகள் இந்தக் குழுவிடம் நிவாரணம் கோர முடியும். நீதவான் முன்னிலையில் வழங்கப்படும் வாக்குமூலங்கள் சந்தேகநபர் ஒருவர் நீதவான் முன்னிலையில் வழங்கும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில், அந்த வாக்குமூலத்திற்கு முன்னரும் பின்னரும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்குதல், வேறு இடத்திற்கு மாற்றுதல் மற்றும் பொலிஸ் மா அதிபர் மூலம் விசாரணை நடத்துதல் உள்ளிட்ட அதிகாரங்கள் நீதவானுக்கு வழங்கப்பட்டுள்ளன.

குற்றங்களுக்கான தண்டனைகள் பயங்கரவாதத் தாக்குதலொன்றின் காரணமாக மரணம் ஏற்பட்டமை தொடர்பில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படுபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

ஏனைய பாரதூரமான குற்றங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு உதவி அல்லது ஆதரவு வழங்குதல் மற்றும் நிதியுதவி செய்தல் ஆகியவற்றுக்கு 20 ஆண்டுகள் வரை கடூழியச் சிறைத்தண்டனையும் 20 மில்லியன் ரூபா வரை அபராதமும் விதிக்க முடியும்.

எனினும், மரணம் அல்லது பாரிய சேதம் ஏற்படாத சந்தர்ப்பங்களில், சட்டமா அதிபரின் இணக்கப்பாடு மற்றும் மேல் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பகிரங்க மன்னிப்புக் கோருதல், புனர்வாழ்வு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் வழக்குத் தொடர்வதை ஒத்திவைக்க அல்லது இடைநிறுத்த புதிய சட்டமூலம் ஏற்பாடுகளை வழங்குகிறது.

Loading

The post பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து: புதிய சட்டமூலத்தை வெளியிட்டது அரசு;  அதிவிசேட வர்த்தமானி வெளியானது appeared first on AKKINIKKUNCHU.

]]>
https://akkinikkunchu.com/389528/feed/ 0
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; அம்புக்கும் வில்லுக்குமே இதுவரை தண்டனை https://akkinikkunchu.com/389526/ https://akkinikkunchu.com/389526/#respond Thu, 24 Sep 2026 04:29:26 +0000 https://akkinikkunchu.com/?p=389526 உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு அம்பாகவும், வில்லாகவும் செயற்பட்டவர்களுக்கே தற்போது விசேட மேல் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. ஆனால் வில்லை பயன்படுத்தி அம்புகளை எய்தவனான பிரதான சூத்திரதாரி யார் என்பது இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவா இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவம் …

The post உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; அம்புக்கும் வில்லுக்குமே இதுவரை தண்டனை appeared first on AKKINIKKUNCHU.

]]>
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு அம்பாகவும், வில்லாகவும் செயற்பட்டவர்களுக்கே தற்போது விசேட மேல் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. ஆனால் வில்லை பயன்படுத்தி அம்புகளை எய்தவனான பிரதான சூத்திரதாரி யார் என்பது இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் இடம் பெற்ற ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவா இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசேட மேல் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை வரவேற்கிறோம். நீண்ட விசாரணைகளுக்கு பின்னர் 24 பிரதிவாதிகளில் 15 பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுத்தாக்தல்களினால் 260 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் .பலர் படுகாயமடைந்தனர் . இன்றும் அதன் தாக்கம் தொடர்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை நீதியின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழில் ‘எய்தவன் இருக்க அம்பை நோவதேன் ‘ என்ற பழிமொழி உள்ளது.உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை இந்தப் பழ மொழியுடன் ஒப்பிட முடியும்.ஏனென்றால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு அம்பாகவும், வில்லாகவும் செயற்பட்டவர்களுக்கே தற்போது விசேட மேல் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்த வில்லை பயன்படுத்தி அம்புகளை எய்தவனான பிரதான சூத்திரதாரி யார் என்பது இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.

எனவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி மற்றும் இதன் உண்மை நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட வேண்டும். பிரதான தரப்பினருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.அப்போது தான் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையாகவும், முழுமையாகவும் நீதி கிடைக்கும் என்றார்.

 

Loading

The post உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; அம்புக்கும் வில்லுக்குமே இதுவரை தண்டனை appeared first on AKKINIKKUNCHU.

]]>
https://akkinikkunchu.com/389526/feed/ 0
லிதுவேனிய புதிய எல்லை பாதுகாப்பு அரண்கள்: பால்டிக் நாடுகளின் எல்லையில் இராணுவ பதற்றம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா https://akkinikkunchu.com/389545/ https://akkinikkunchu.com/389545/#respond Thu, 24 Sep 2026 04:17:07 +0000 https://akkinikkunchu.com/?p=389545 ஐரோப்பாவின் கிழக்கு எல்லையில் பாதுகாப்புப் பதற்றம் மீண்டும் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் கலினின்கிராட் பிராந்தியம் மற்றும் பெலாரஸை ஒட்டியுள்ள தனது எல்லைகளில் எதிர்ப்பு அகழிகள், கம்பிவலைகள், சாலைத் தடைகள், “டிராகனின் பற்கள்” எனப்படும் கான்கிரீட் தடுப்புகள் உள்ளிட்ட இராணுவப் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்க லிதுவேனியா (Lithuania) நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை, உக்ரைன் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் பாதுகாப்புச் சூழலில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான இராணுவப் போட்டி எந்த அளவுக்கு …

The post லிதுவேனிய புதிய எல்லை பாதுகாப்பு அரண்கள்: பால்டிக் நாடுகளின் எல்லையில் இராணுவ பதற்றம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா appeared first on AKKINIKKUNCHU.

]]>
ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஐரோப்பாவின் கிழக்கு எல்லையில் பாதுகாப்புப் பதற்றம் மீண்டும் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் கலினின்கிராட் பிராந்தியம் மற்றும் பெலாரஸை ஒட்டியுள்ள தனது எல்லைகளில் எதிர்ப்பு அகழிகள், கம்பிவலைகள், சாலைத் தடைகள், “டிராகனின் பற்கள்” எனப்படும் கான்கிரீட் தடுப்புகள் உள்ளிட்ட இராணுவப் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்க லிதுவேனியா (Lithuania) நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கை, உக்ரைன் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் பாதுகாப்புச் சூழலில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான இராணுவப் போட்டி எந்த அளவுக்கு தீவிரமடைந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களாக உள்ளன.

ரஷ்ய எல்லையில் பாரிய பாதுகாப்பு

லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா ஆகியவை பால்டிக் நாடுகள். இவை அனைத்தும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள். அதேவேளை ரஷ்யா அல்லது ரஷ்யாவுடன் நெருங்கிய உறவில் உள்ள பெலாரஸுடன் நேரடி எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
லிதுவேனியாவுக்கு குறிப்பாக ரஷ்யாவின் கலினின்கிராட் பிராந்தியம் மிக முக்கியமான பாதுகாப்புச் சவாலாக உள்ளது. ரஷ்யாவின் பிரதான நிலப்பரப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கலினின்கிராட், பால்டிக் கடற்கரையில் அமைந்துள்ள முக்கியமான ரஷ்ய இராணுவத் தளமாகும்.

மறுபுறம் பெலாரஸ் ரஷ்யாவின் நெருங்கிய இராணுவக் கூட்டாளியாக உள்ளது. இதனால் லிதுவேனியாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு எல்லைகள் இராணுவ ரீதியாக மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதிகளாக மாறியுள்ளன. 2022-ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது முழுமையான படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், பால்டிக் நாடுகளின் அச்சம் மேலும் அதிகரித்தது. உக்ரைனில் நடந்தது எதிர்காலத்தில் எங்களுக்கும் நடக்கலாம் என்ற அச்சம், அவற்றின் பாதுகாப்புக் கொள்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

20 மீட்டர் எதிர்ப்பு அகழிகள்

லிதுவேனியாவின் புதிய பாதுகாப்புத் திட்டத்தில் எதிரி இராணுவ வாகனங்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கான அகழிகள் முக்கிய இடம் பெறுகின்றன. சில பகுதிகளில் சுமார் 20 மீட்டர் அகலமுள்ள எதிர்ப்பு அகழிகள் அமைக்கப்பட உள்ளன. இதன் நோக்கம் எதிரி படையை உடனடியாக அழிப்பது அல்ல. மாறாக, டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களின் வேகத்தை குறைத்து, அவற்றின் நகர்வை குறிப்பிட்ட பாதைகளுக்குள் கட்டுப்படுத்துவதாகும்.

இதன் மூலம் லிதுவேனிய மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிர் வினையாற்றுவதற்கான கூடுதல் நேரம் கிடைக்கும். சில முக்கிய இடங்களில் இந்தப் பாதுகாப்பு மண்டலம் 150 மீட்டர் வரை விரிவுபடுத்தப்படலாம். இது நவீன இராணுவத் தந்திரத்தில் எதிர்ப்பு நகர்வு (counter-mobility) பாதுகாப்பு முறையின் ஒரு பகுதியாகும்.

பால்டிக் ‘டிராகனின் பல்’ தற்காப்பு வரிசை:

லிதுவேனியா ஏற்கனவே பல்வேறு இராணுவப் பொறியியல் தடுப்புகளை சேமித்து வைக்கும் பூங்காக்களை உருவாக்கியுள்ளது. டிராகனின் பல் (Dragon’s Teeth) எனப்படும் கான்கிரீட் தடுப்புகள், சாலைத் தடைகள், கம்பிவலைகள் மற்றும் பிற உபகரணங்கள் இதில் அடங்குகின்றன.
இத்தகைய இராணுவப் பொறியியல் பூங்காக்களின் எண்ணிக்கையை 27-இல் இருந்து 50 ஆக அதிகரிக்க லிதுவேனியா திட்டமிட்டுள்ளது. போர்நிலை ஏற்பட்டால் தடுப்புகளை புதிதாக உருவாக்குவதற்குப் பதிலாக அவற்றை உடனடியாகப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மேலும், இயற்கையான காடுகள், நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களையும் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கனரக இராணுவ வாகனங்கள் மற்றும் டாங்கிகள் வேகமாக முன்னேற முடியாத வகையில் நில அமைப்புகளைப் பயன்படுத்துவது இதன் நோக்கமாகும்.

லிதுவேனியாவின் நடவடிக்கையை தனிப்பட்ட திட்டமாக மட்டும் பார்க்க முடியாது. இது எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளும் இணைந்து உருவாக்கும் (Baltic Defence Line) தற்காப்பு வரிசையின் ஒரு பகுதியாகும். 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் நோக்கம், மூன்று நாடுகளின் கிழக்கு எல்லைகளிலும் பதுங்கு குழிகள், எதிர்ப்பு அகழிகள், சாலைத் தடைகள் மற்றும் பிற இராணுவத் தடுப்புகளை உருவாக்குவதாகும். இந்த நடவடிக்கைகள் நேட்டோவின் கிழக்கு எல்லையைப் பாதுகாக்கும் பரந்த திட்டத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன.

சுவால்கி இடைவெளி

இந்த விவகாரத்தில் சுவால்கி இடைவெளி (Suwałki Gap) மிகவும் முக்கியமானது. இது லிதுவேனியாவுக்கும் போலந்துக்கும் இடையிலான நிலப்பகுதி. ஒருபுறம் ரஷ்யாவின் கலினின்கிராட்; மறுபுறம் பெலாரஸ். பால்டிக் நாடுகளை போலந்து மற்றும் மேற்கு ஐரோப்பாவுடன் இணைக்கும் முக்கியமான நிலப்பாதை என்பதால், எதிர்கால இராணுவ மோதலில் இது முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது.

இதன் காரணமாக லிதுவேனியா மட்டுமல்லாமல் போலந்தும் தனது கிழக்கு எல்லைப் பாதுகாப்பை அதிகரித்து வருகிறது. எல்லைகளில் அகழிகள் தோண்டப்படுவது மற்றும் இராணுவத் தடுப்புகள் அமைக்கப்படுவது, போரைத் தொடங்குவதற்கான நடவடிக்கையாக இல்லாமல், எதிரி தாக்குதலைத் தடுப்பதற்கான முயற்சியாகவும் இருக்கலாம். நேட்டோவின் அடிப்படை பாதுகாப்புக் கொள்கைகளில் ஒன்றான தடுப்பு (deterrence) இதையே வலியுறுத்துகிறது.

ஒரு நாட்டைத் தாக்குவது மிகவும் கடினமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே காட்டுவதன் மூலம் தாக்குதலைத் தவிர்ப்பதே இந்தக் கொள்கையின் நோக்கம். ஆனால் மறுபுறம், ரஷ்யா–நேட்டோ உறவுகள் ஏற்கனவே மிகுந்த பதற்றத்தில் உள்ளன. உக்ரைன் போர், நேட்டோவின் கிழக்கு விரிவாக்கம், ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பெலாரஸின் ரஷ்யாவுடனான நெருக்கம் ஆகியவை நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றன.

புதிய இரும்புத் திரையா?

பனிப்போர் முடிவடைந்தபோது ஐரோப்பாவின் கிழக்கு–மேற்கு இராணுவப் பிரிவு முடிவுக்கு வந்ததாக பலர் கருதினர். ஆனால் உக்ரைன் போர் அந்தப் பழைய புவிசார் அரசியல் பிரிவின் சில அம்சங்களை மீண்டும் உருவாக்கியுள்ளது. பல்டிக் நாடுகள் தங்கள் எல்லைகளை வெறும் தேசிய எல்லைகளாக அல்லாமல், நேட்டோவின் முன் பாதுகாப்பு வரியாகக் கருதுகின்றன. அகழிகள், பதுங்கு குழிகள், கான்கிரீட் தடுப்புகள் மற்றும் அதிகரிக்கும் இராணுவச் செலவுகள் இதன் வெளிப்பாடுகளாகும்.

ஐரோப்பா மீண்டும் பெரிய அளவிலான போர் சாத்தியத்தைத் தனது பாதுகாப்புத் திட்டங்களில் தீவிரமாகக் கருத்தில் கொள்ளத் தொடங்கியுள்ளது என்பதற்கான முக்கிய அறிகுறியாகும். இன்றைய ஐரோப்பிய பாதுகாப்பு அரசியலின் மிகப்பெரிய முரண்பாடு இதுதான்: போரைத் தடுப்பதற்காக ஆயுதங்களையும் பாதுகாப்பு அரண்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது; ஆனால் அதே இராணுவப் போட்டி எதிர்காலப் பதற்றத்தையும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது. லிதுவேனிய எல்லைகளில் தோண்டப்படும் அகழிகள் வெறும் மண்ணில் தோண்டப்படும் பள்ளங்கள் அல்ல. அவை உக்ரைன் போருக்குப் பின்னர் மாறிவிட்ட ஐரோப்பிய பாதுகாப்பு மனநிலையின் அடையாளங்களாகும்.

Loading

The post லிதுவேனிய புதிய எல்லை பாதுகாப்பு அரண்கள்: பால்டிக் நாடுகளின் எல்லையில் இராணுவ பதற்றம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா appeared first on AKKINIKKUNCHU.

]]>
https://akkinikkunchu.com/389545/feed/ 0
மைத்திரி, கோட்டா குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்; கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் https://akkinikkunchu.com/389530/ https://akkinikkunchu.com/389530/#respond Thu, 24 Sep 2026 03:54:47 +0000 https://akkinikkunchu.com/?p=389530 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராக தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோன்று, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன உள்ளிட்டவர்களுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கத்தோலிக்க சபை கோரியுள்ளது. அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு …

The post மைத்திரி, கோட்டா குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்; கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் appeared first on AKKINIKKUNCHU.

]]>
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராக தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன உள்ளிட்டவர்களுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கத்தோலிக்க சபை கோரியுள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அருட்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான அனைத்து தரப்பினரிடமும் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் இத்தகைய பாரிய குற்றச் சம்பவங்கள் இடம்பெறாத வகையில் அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Loading

The post மைத்திரி, கோட்டா குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்; கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் appeared first on AKKINIKKUNCHU.

]]>
https://akkinikkunchu.com/389530/feed/ 0
அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம் https://akkinikkunchu.com/389516/ https://akkinikkunchu.com/389516/#respond Thu, 24 Sep 2026 03:45:25 +0000 https://akkinikkunchu.com/?p=389516 சவூதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுவதாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி விவசாயம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்றுமதி முக்கியமானது. அதில் விவசாயம் மிக முக்கியமானதாக இருக்கின்றது. இலங்கை விவசாயத்தில் தேயிலை நாட்டுக்கு மூன்றாவது வருமானத்தை …

The post அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம் appeared first on AKKINIKKUNCHU.

]]>
சவூதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுவதாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி விவசாயம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்றுமதி முக்கியமானது. அதில் விவசாயம் மிக முக்கியமானதாக இருக்கின்றது. இலங்கை விவசாயத்தில் தேயிலை நாட்டுக்கு மூன்றாவது வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் துறையாக இருக்கின்றது. சிலோன் டீ என்பது உலகில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் இதனை ஏற்றுமதி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் தேயிலையை இங்கு கொண்டு வந்து இங்குள் பெயர்பெற்ற தேயிலையுடன் கலந்து அதனை ஏற்றுமதி செய்வதால் இலங்கை தேயிலையின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படுகின்றது. இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கோருகின்றேன்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றேன்.

அத்துடன் ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள கல்வி காரியாலத்திற்கு 67 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காரியாலயத்தை ஹட்டனில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு கினிகத்தேனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் தவறான விடயமாகும். அங்கு 130 பெருந்தோட்ட பாடசாலைகள் இருக்கின்றன. இதனால் அது ஹட்டனிலேயே அமைய வேண்டும் என்று கோருகின்றோம்.

அது மட்டுமன்றி ஹட்டனில் குப்பை பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. அந்த பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் ரெஸ்ட் ஹவுஸ் அமைந்துள்ள பகுதியில் குப்பை போடாமல் அந்த இடத்தில் கல்வி காரியாலயத்தை நிர்மானிக்கலாம். குப்பை போடுவதற்கு வேறு இடத்தை தருவதற்கு எங்களால் உதவி செய்ய முடியும். இந்நிலையில் அந்த காரியாலயத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்கின்றோம்.

அத்துடன் கொட்டகலை பெட்ரோலிய கூட்டுத்தாபன பாதை 30 வருடங்களாக மூடி வைக்கப்பட்டுள்ளது. அதனை திறக்குமாறு கோருகின்றோம். கொழும்பில் அலரி மாளிகை வீதியே திறக்கப்பட்டுள்ளது. இப்போது நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதனால் குறித்த வீதியை திறக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை சவூதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை விடுவிக்கும் விடயத்தில் அரசாங்கம் முழு மூச்சுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த விடயத்தில் அரசாங்கத்தை பாராட்டுக்கின்றோம். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்திற்கு சாதகமான விடயமே என்றார்.

Loading

The post அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம் appeared first on AKKINIKKUNCHU.

]]>
https://akkinikkunchu.com/389516/feed/ 0
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்; தொடர்பில் ஒரு குடும்பமே சிறையில்; 240 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் ஹக் தெரிவிப்பு https://akkinikkunchu.com/389508/ https://akkinikkunchu.com/389508/#respond Thu, 24 Sep 2026 03:40:50 +0000 https://akkinikkunchu.com/?p=389508 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐந்தாவது பிரதிவாதியான முகமது இப்ராகிம் சாஹித் அப்துல் ஹக், நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார். இதன்போது, “இவ்வழக்கில் நான் ஐந்தாவது குற்றவாளி. நான்காவது குற்றவாளி எனது சகோதரர் ஆவார். சற்று நேரத்திற்கு முன்புதான், 14வது குற்றவாளியான எனது தந்தை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். நானும் எனது சகோதரரும் ஏழரை ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறோம். ஈஸ்டர் தாக்குதல்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எனது …

The post உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்; தொடர்பில் ஒரு குடும்பமே சிறையில்; 240 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் ஹக் தெரிவிப்பு appeared first on AKKINIKKUNCHU.

]]>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐந்தாவது பிரதிவாதியான முகமது இப்ராகிம் சாஹித் அப்துல் ஹக், நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்போது, “இவ்வழக்கில் நான் ஐந்தாவது குற்றவாளி. நான்காவது குற்றவாளி எனது சகோதரர் ஆவார். சற்று நேரத்திற்கு முன்புதான், 14வது குற்றவாளியான எனது தந்தை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
நானும் எனது சகோதரரும் ஏழரை ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறோம். ஈஸ்டர் தாக்குதல்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எனது தந்தை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எனது மற்றொரு சகோதரரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
எனது சகோதரி இரண்டரை ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டிருந்தார்; பின்னர் அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். எனது சகோதரரின் மனைவி நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு விடுவிக்கப்பட்டார்.
எனது இளைய சகோதரருக்கு ஒன்பது வயதும், இளைய சகோதரிக்கு ஏழு வயதும் ஆகிறது; இச்சம்பவம் தொடர்பாக அவர்களும் ஐந்து நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மொத்தத்தில், ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இது எங்களை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்கியதுடன், எங்கள் குடும்பத்திற்குப் பெரும் துயரத்தையும் ஏற்படுத்தியது. நான் சிறையில் அடைக்கப்பட்டபோது எனக்கு இருபத்தேழு வயது; இப்போது எனக்கு முப்பத்து நான்கு வயது ஆகிறது.
இதற்காக நான் ஏழரை ஆண்டுகளை விளக்கமறியலில் கழித்தேன். இன்று நான் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளேன். இந்தத் தாக்குதலில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது என்னைப் படைத்த இறைவனுக்குத் தெரியும்.
இந்தக் குற்றச்சாட்டுகளினால் நான் குற்றவாளி அல்ல. நான் இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளேன். இவ்வழக்கை நடத்துவதற்குப் பெருமளவிலான பணம் செலவிடப்படுகிறது. எது எப்படியாயினும், நான் நிரபராதி என்பது எனக்குத் தெரியும்.” எனவும் தெரிவித்தார்.

Loading

The post உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்; தொடர்பில் ஒரு குடும்பமே சிறையில்; 240 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் ஹக் தெரிவிப்பு appeared first on AKKINIKKUNCHU.

]]>
https://akkinikkunchu.com/389508/feed/ 0
13 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் சித்தப்பாவுக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு https://akkinikkunchu.com/389513/ https://akkinikkunchu.com/389513/#respond Thu, 24 Sep 2026 03:38:33 +0000 https://akkinikkunchu.com/?p=389513 மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக, அவரது சித்தப்பாவான க.ஜெயானந்தம் (வயது 35) என்பவருக்கு இரு குற்றச்சாட்டுகளின் கீழ் 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும், 10,000 ரூபா அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டார். 2019ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி, 13 வயதுச் சிறுமியை அவரது சித்தப்பா (வயது …

The post 13 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் சித்தப்பாவுக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on AKKINIKKUNCHU.

]]>
மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக, அவரது சித்தப்பாவான க.ஜெயானந்தம் (வயது 35) என்பவருக்கு இரு குற்றச்சாட்டுகளின் கீழ் 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும், 10,000 ரூபா அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டார்.

2019ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி, 13 வயதுச் சிறுமியை அவரது சித்தப்பா (வயது 35) பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகச் சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக, தண்டனைச் சட்டக் கோவையின் 354ஆம் பிரிவின் கீழ் ‘சிறுமியைக் கடத்திச் சென்றமை’ மற்றும் 364ஆம் பிரிவின் கீழ் ‘பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை’ ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அரசுத் தரப்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் பி. தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

விசாரணைகளின் முடிவில், அவர் குற்றவாளி எனச் சென்ற மாதம் (24.08.2026) நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை (18) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதன்படி, முதலாவது குற்றச்சாட்டான ‘சிறுமியைக் கடத்திச் சென்றமைக்கு’ 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 5,000 ரூபா அபராதமும், இரண்டாவது குற்றச்சாட்டான ‘பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்கு’ 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 5,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

Loading

The post 13 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் சித்தப்பாவுக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on AKKINIKKUNCHU.

]]>
https://akkinikkunchu.com/389513/feed/ 0